மங்களூரு மதக்கலவரம்: உளவுத் துறை அதிகாரிகளை கடிந்துகொண்ட முதல்வர்

மங்களூரு மதக்கலவரம் குறித்து முன்கூட்டியே தகவல் தராதது மட்டுமல்லாது, அதை தடுக்க போதிய முன்கவனம் செலுத்தாதது குறித்து உளவுத் துறைஉயரதிகாரிகளை முதல்வர் சித்தராமையா கடிந்துகொண்டுள்ளார்.

இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ மக்கள் சம எண்ணிக்கையில் வாழும் தென்கன்னட மாவட்டத்தில், குறிப்பாக மங்களூரில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் மதக்கலவரம் நிகழ்ந்தது. ஆர்எஸ்எஸ் தொண்டர் சரத் மடிவாலா கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் கல்வீசி பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. கலவரத்தை அடக்க போலீஸôர் தடியடி நடத்தினர். மேலும் மங்களூரு உள்ளிட்ட தென்கன்னட மாவட்டத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, மங்களூரில் நிலைமை கட்டுக்குள் வந்தாலும், அதுகுறித்து முதல்வர் சித்தராமையாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. சட்டம்}ஒழுங்கு சீராக கடைபிடிக்கப்படவில்லை. சட்டம்}ஒழுங்கை பராமரிக்க முடியாவிட்டால் முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதைத் தொடர்ந்து, மாவட்ட பொறுப்பு அமைச்சர் ரமாநாத்ராய் தலைமையில் அமைதிக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை பாஜக, மஜத போன்ற எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. தென்கன்னட மாவட்டத்தில் மதரீதியான பதற்றம் மக்களிடையே நீடித்துவரும் நிலையில், இந்த கலவரம் குறித்து முன்கூட்டியே காவல்துறைக்கு எச்சரிக்கை வழங்காத உளவுத் துறை டிஜிபி கே.என்.ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகளை முதல்வர் சித்தராமையா கடிந்துகொண்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன read more

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s