திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட கணினிப் பொறியாளர் கைது

  தமிழில் வெளியாகும் புதிய திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட கணினிப் பொறியாளரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: திருட்டு சி.டி. தயாரிப்போரை கண்டறிந்து போலீஸாருக்கு தகவல் அளிக்கவும், இணையதளத்தில் புதிய திரைப்படங்களை வெளியிடுவோரைக் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பைரசி என்ற குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, புதிய தமிழ் திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிடும் நபர்கள் குறித்த ரகசிய விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அண்மையில்… Continue reading திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட கணினிப் பொறியாளர் கைது

அதிமுகவில் பொதுச் செயலாளர் பொறுப்பே இனி இல்லை

அதிமுக தாற்காலிக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா நியமிக்கப்பட்டது ரத்து செய்யப்படுவதாக கட்சிப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவரது நியமனங்கள், நீக்கங்கள், சேர்த்தல்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லாது. பொதுச் செயலாளர் என்ற பொறுப்பே இல்லை எனவும் முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், கட்சிப் பொறுப்புகள், கட்சியை வழிநடத்துவது போன்றவை குறித்து நான்கு முக்கிய தீர்மானங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:… Continue reading அதிமுகவில் பொதுச் செயலாளர் பொறுப்பே இனி இல்லை

துரோகி பட்டம் சூட்ட என்ன தகுதி இருக்கிறது?: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

எங்களுக்கு துரோகி பட்டம் சூட்ட டிடிவி தினகரன் என்ன தகுதி இருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பினார்.சென்னையை அடுத்த வானகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக (அம்மா, புரட்சித்தலைவி அம்மா) பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி ஆற்றிய உரை:பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுமா, நடைபெறாதா என்று நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. விசுவாசமிக்க பொதுக்குழு உறுப்பினர்கள் இந்த பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டுவார்கள் என நீதிமன்றமே நமக்கு நீதி வழங்கியிருக்கிறது. முதல் வெற்றி நமக்கு இப்போது கிடைத்திருக்கிறது.எவராக இருந்தாலும் கட்சியை… Continue reading துரோகி பட்டம் சூட்ட என்ன தகுதி இருக்கிறது?: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

மாணவி அனிதா குடும்பத்துக்கு நடிகர் விஜய் நேரில் ஆறுதல்!

அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (54). இவர் திருச்சி காந்தி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் அனிதா. இவருக்கு 4 அண்ணன்கள் உள்ளனர். பிளஸ் 2 தேர்வில் அனிதா 1200-க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால், நீட் தேர்வு முடிவில் இவர் 700-க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இவரது மருத்துவ கட் ஆப் மதிப்பெண் 196.75 ஆகும். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவருக்கு… Continue reading மாணவி அனிதா குடும்பத்துக்கு நடிகர் விஜய் நேரில் ஆறுதல்!

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை நீடிக்கும்

புதுதில்லி: கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. லஞ்ச வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக கண்காணிக்கப்படும் நபர் என்று நோட்டீஸ் அனுப்பியதற்கு உரிய காரணம் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனம் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களைத் தொடங்குவதற்காக வெளிநாடுகளில் இருந்து முதலீடு திரட்டுவதற்கு கடந்த 2007இல் மத்திய அரசின் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் கடந்த… Continue reading கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை நீடிக்கும்

வராத கூட்டம்: நிலைமையை மாற்றுமா விக்ரம் வேதா?

தமிழக அரசின் 30 சதவீத கேளிக்கை வரி எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள 1,200 திரையரங்குகள் சமீபத்தில் மூடப்பட்டன. கடந்த 3-ம் தேதி முதல் நான்கு நாள்களாகத் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு போராட்டம் நடைபெற்றது. திரையரங்குகளுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரி குறித்து விவாதிக்க குழு அமைக்கும் அரசின் முடிவை ஏற்றுக்கொண்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் இயங்க ஆரம்பித்தன. தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுக்கான கட்டணத்துடன், ஜிஎஸ்டி சேர்த்து புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.… Continue reading வராத கூட்டம்: நிலைமையை மாற்றுமா விக்ரம் வேதா?

கமல் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும்

நடிகர் கமல்ஹாசன் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி : குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு எங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளோம். அவர் உறுதியாக வெற்றி பெறுவார். குடியரசுத் தலைவராக அவர் பொறுப்பேற்ற பிறகு தில்லி சென்று அவரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம். பாஜக வேட்பாளரை ஆதரிக்க எந்த நிபந்தனையும்… Continue reading கமல் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும்