திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட கணினிப் பொறியாளர் கைது

  தமிழில் வெளியாகும் புதிய திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட கணினிப் பொறியாளரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: திருட்டு சி.டி. தயாரிப்போரை கண்டறிந்து போலீஸாருக்கு தகவல் அளிக்கவும், இணையதளத்தில் புதிய திரைப்படங்களை வெளியிடுவோரைக் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பைரசி என்ற குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, புதிய தமிழ் திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிடும் நபர்கள் குறித்த ரகசிய விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அண்மையில்… Continue reading திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட கணினிப் பொறியாளர் கைது

பரபரப்பான அரசியல் சூழலில் நாளை அதிமுக பொதுக்குழு-செயற்குழு கூட்டம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப். 12) நடைபெறுகிறது. சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியே அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக (அம்மா, புரட்சித்தலைவி அம்மா) சார்பில் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் என கட்சியின் தலைமை நிலையச் செயலாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி, துணை… Continue reading பரபரப்பான அரசியல் சூழலில் நாளை அதிமுக பொதுக்குழு-செயற்குழு கூட்டம்

இரண்டே வரியில் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளருக்கான பதவிக்கு வெறும் 2 வரியில் சேவாக் விண்ணப்பித்திருப்பது பி.சி.சி.ஐ நிர்வாகிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதிய பயிற்சியாளரான அனில் கும்ப்லேவின் ஒரு வருட ஒப்பந்த காலம் முடிவடையவுள்ள நிலையில் பலரும் அப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் சேவாக், தான் கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் ஆலோசகராக இருந்ததாகவும் மற்றும் தற்போதைய இந்திய வீரர்களைப் பற்றி நன்கு அறிந்திருப்பதாகவும் மட்டுமே குறிப்பிட்டு விண்ணப்பித்துள்ளார் click here

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு தில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஏர்செல் – மேக்சிஸ் ஒப்பந்த விவகார வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு தில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது read more

லண்டன்: இந்திய உணவகத்தில் மனித இறைச்சி பயன்படுத்தப்படுவதாக புரளி

உணவகத்தில் மனித இறைச்சி பயன்படுத்தப்படுவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று ஷின்ரா பேகம்  கூறினர் read more

தினகரனுக்கு எதிரான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

டிடிவி தினகரனுக்கு எதிரான நடவடிக்கை துரிதப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் தெரிவித்தார் read more.