கமல் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும்

நடிகர் கமல்ஹாசன் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி : குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு எங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளோம். அவர் உறுதியாக வெற்றி பெறுவார். குடியரசுத் தலைவராக அவர் பொறுப்பேற்ற பிறகு தில்லி சென்று அவரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம். பாஜக வேட்பாளரை ஆதரிக்க எந்த நிபந்தனையும்… Continue reading கமல் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும்

கமல்ஹாசனை தாக்கினால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும்: வைகோ

கமல்ஹாசனை தாக்கினால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார். ஈரோடு மேற்கு மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் கோபியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் தமிழர்களின் வாழ்வாதாரத்துக்கு பேராபத்து ஏற்பட்டு வருகிறது. காவிரி பிரச்னையில் தமிழக அரசை மத்திய அரசு  வஞ்சித்துவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டும், மத்திய அரசு அமைக்கவில்லை. மத்திய அரசு அனுமதி கொடுக்காமலேயே,  மேகதாதுவில் அணை கட்டப்படுகிறது.… Continue reading கமல்ஹாசனை தாக்கினால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும்: வைகோ

மங்களூரு மதக்கலவரம்: உளவுத் துறை அதிகாரிகளை கடிந்துகொண்ட முதல்வர்

மங்களூரு மதக்கலவரம் குறித்து முன்கூட்டியே தகவல் தராதது மட்டுமல்லாது, அதை தடுக்க போதிய முன்கவனம் செலுத்தாதது குறித்து உளவுத் துறைஉயரதிகாரிகளை முதல்வர் சித்தராமையா கடிந்துகொண்டுள்ளார். இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ மக்கள் சம எண்ணிக்கையில் வாழும் தென்கன்னட மாவட்டத்தில், குறிப்பாக மங்களூரில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் மதக்கலவரம் நிகழ்ந்தது. ஆர்எஸ்எஸ் தொண்டர் சரத் மடிவாலா கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் கல்வீசி பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. கலவரத்தை அடக்க போலீஸôர் தடியடி நடத்தினர். மேலும் மங்களூரு உள்ளிட்ட தென்கன்னட… Continue reading மங்களூரு மதக்கலவரம்: உளவுத் துறை அதிகாரிகளை கடிந்துகொண்ட முதல்வர்

வெற்றிக்கு மிக அருகில் சென்று ஏமாற்றம் அடைந்த ஆஸ்திரேலியா!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. வெற்றிக்கு மிக அருகில் சென்ற ஆஸ்திரேலிய அணி, கடைசியில் ஆட்டம் கைவிடப்பட்டதால் ஒரு புள்ளி மட்டுமே பெற்றுள்ளது. லண்டனில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் அந்த அணி 44.3 ஓவர்களில் 182 ரன்களுக்குச் சுருண்டது. அந்த அணியில் தொடக்க வீரர் தமிம் இக்பால் 95 ரன்கள் குவித்தபோதும், எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியது ஏமாற்றமாக… Continue reading வெற்றிக்கு மிக அருகில் சென்று ஏமாற்றம் அடைந்த ஆஸ்திரேலியா!

சசிகலா புஷ்பா, குடும்பத்தினரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

சசிகலா புஷ்பா எம்.பி. மற்றும் அவரது குடும்பத்தினரைக் கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர் சசிகலாபுஷ்பாவின் வீட்டில் இளம்பெண் பானுமதி, அவருடைய சகோதரி ஜான்சிராணி இருவரும் வீட்டு வேலை செய்து வந்தனர் click here

இரண்டே வரியில் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளருக்கான பதவிக்கு வெறும் 2 வரியில் சேவாக் விண்ணப்பித்திருப்பது பி.சி.சி.ஐ நிர்வாகிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதிய பயிற்சியாளரான அனில் கும்ப்லேவின் ஒரு வருட ஒப்பந்த காலம் முடிவடையவுள்ள நிலையில் பலரும் அப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் சேவாக், தான் கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் ஆலோசகராக இருந்ததாகவும் மற்றும் தற்போதைய இந்திய வீரர்களைப் பற்றி நன்கு அறிந்திருப்பதாகவும் மட்டுமே குறிப்பிட்டு விண்ணப்பித்துள்ளார் click here