கமல்ஹாசனை தாக்கினால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும்: வைகோ

கமல்ஹாசனை தாக்கினால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார். ஈரோடு மேற்கு மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் கோபியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் தமிழர்களின் வாழ்வாதாரத்துக்கு பேராபத்து ஏற்பட்டு வருகிறது. காவிரி பிரச்னையில் தமிழக அரசை மத்திய அரசு  வஞ்சித்துவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டும், மத்திய அரசு அமைக்கவில்லை. மத்திய அரசு அனுமதி கொடுக்காமலேயே,  மேகதாதுவில் அணை கட்டப்படுகிறது.… Continue reading கமல்ஹாசனை தாக்கினால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும்: வைகோ